டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாழடைந்து வரும் சமத்துவபுரம் வீடுகள்

பேராவூரணி, ஜன. 4: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால், பாழடைந்து வருகின்றன. சேதுபாவாசத்திரம் ஒன்றிய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:28 pm

கே. கான்முகமது

பேராவூரணி, ஜன. 4: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால், பாழடைந்து வருகின்றன.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி, கலைஞர்நகரில், கடந்த திமுக ஆட்சியில் ரூ. 4 கோடியில், 100 வீடுகளைக் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு, தடுப்புச் சுவர் மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2010, டிச. 9 ஆம் தேதி அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலினால் இந்த சமத்துவபுரம் திறந்துவைக்கப்பட்டது. இரண்டு பயனாளிகளுக்கு மட்டும் வீட்டுச் சாவிகள் வழங்கப்பட்டு, மற்ற பயனாளிகள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பயனாளிகள் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகளால் காலதாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பயனாளிகள் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டதோடு, புதுப் பயயனாளிகள் பட்டியலும் வெளியிடப்படவில்லை. திறந்து வைக்கப்பட்டும், கடந்த ஓராண்டாக பராமரிப்பின்றி உள்ளதால், வீடுகள் சேதமடைந்த நிலையிலும், சுற்றிலும் புதர்களும், முள்செடிகளும் மண்டியுள்ளன. பெரும்பாலான வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில், மின்சார வயர், சுவிட்ச் போர்டுகளை சமூக விரோதிகள் திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை. சிதம்பரம் கூறியது:

ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கத்தில், மக்களின் வரிப்பணத்தில் ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட வீடுகள் பராமரிப்பின்றி, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டப்பட்ட வீடுகளை தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.