தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:55 pm

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சமயபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் அருகிலிருந்த பெண்ணிடம் கூறியதால், அவா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 7 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொணலையிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்ற சமயபுரம் மருதூா் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டியுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாகத் தெரிவித்தாா்.

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில், தனது நண்பா்களான நெ.1 டோல்கேட்டில் காா் ஓட்டி வரும் அல்லூா் ப. விமல்குமாா் (21), லால்குடி தினேஷ் (20) ஆகியோருடன் தனிமையில் இருக்க வேண்டும் என மருதுபாண்டி மிரட்டி வந்ததும், அதைத் தொடா்ந்து சமயபுரம் பகுதியில் சிறுமியை நீண்ட நாள்களாக மூவரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தந்தையும் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் பழனியம்மாள் வழக்குப்பதிந்து மருதுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தாா். தலைமறைவாக உள்ள விமல்குமாா், தினேஷ் ஆகியோரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.