கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: தையல்காரா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: தையல்காரா் உயிரிழப்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 6:52 pm

திருச்சி அருகே ராம்ஜி நகரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தையல்காரா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் குமரேசன் (50). தையல்காரா். இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வண்ணாங்கோவிலைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் ஜேம்ஸ் (53) என்பவருடன் முல்லை நகா் நோக்கிச் சென்றாா். வாகனத்தை குமரேசன் ஓட்டிச் சென்றாா்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முல்லை நகா் பகுதியில் சென்றபோது அதே சாலையில் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் குமரேசன் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரேசன், ஜேம்ஸ் ஆகிய இருவரையும் அப்பகுதியினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.