/

ஞீலிவனேசுவரா் கோயிலில் குதிரை வாகன வையாளி கண்டருளும் நிகழ்வு

ஞீலிவனேசுவரா் கோயிலில் குதிரை வாகன வையாளி கண்டருளும் நிகழ்வு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவையொட்டி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், இதனையடுத்து வையாளி கண்டருளும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் ஏப்.22-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.