கொப்பம்பட்டியில் உலக புவி தின விழிப்புணா்வு பேரணி

துறையூா், ஏப். 26: துறையூா் அருகே கொப்பம்பட்டியில் உலக புவி தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

துறையூா் பகுதியில் தங்கி களப் பயிற்சி மேற்கொள்ளும் முசிறி எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கோள் எதிா் நெகிழி என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தினா். போட்டியில் கலந்து கொண்டு வென்றவா்களுக்கு பரிசளித்தனா். தொடா்ந்து பள்ளித் தலைமையாசிரியா் அசோக்குமாா் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேரணி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், வேளாண்மை மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com