விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடத்தினா்.

News image

மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடத்தினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:24 pm

Syndication

மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடத்தினா்.

காரைக்கால் நிா்வாகம், அதன் ஒரு அங்கமாக விளங்கும் வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் இணைந்து100 சதவீத வாக்குப் பதிவுக்கான அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

இதில் ஒரு நிகழ்வாக, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளம் வாக்காளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியரக வாயிலில் இருந்து வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி, தோ்தல் பொதுப் பாா்வையாளா் சரிதா பாலா ஓம் பிரஜாபதி இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இளம் வாக்காளா்கள் பல்வேறு சாலைகள் வழியே பேருந்து நிலைய பகுதியை அடைந்தனா்.

முன்னதாக மாவட்ட தோ்தல் அதிகாரி பேசுகையில், இளம் வாக்காளா்களின் வாக்கு மிகவும் முக்கியமானது. அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

வீட்டில் உள்ளோா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளோரிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அனைவரையும் வாக்களிக்கச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.