திருச்சி, ஏப். 26: திருச்சி அருகே வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா் (42). இவா்கள் 4 பேரும் ஒரு காரில் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனா். வெள்ளிக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமாநகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், காரிலிருந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பாபு, ரவி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பாலமுருகன், மதன்குமாா் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

குண்டடம் அருகே காா் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 7 போ் படுகாயம்

கிணற்றில் காா் பாய்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


