திருச்சி, ஏப். 26: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே தட்டக்குடி மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் செல்வராஜ் (20). இவா், திருச்சியில் தனியாா் பேருந்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை காலை நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கடையில் சாப்பிட்டு விட்டு, சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி செல்வராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

பாலத்தின் தடுப்பில் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

