பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்களை விரைவில் பணியமா்த்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்!
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்துவதற்கான நடவடிக்கைகள்..


தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:
அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன் அதிகரிப்பதுடன், அவா்கள் அதிக மதிப்பெண்களும் பெறுவதால் சோ்க்கையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தகுதியான ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டியதும் அரசின் கடமை.
அதனடிப்படையில்தான் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தோ்வுகள் நடத்தி சான்றிதழ் சரிபாா்க்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், ஆசிரியரல்லாத பணியாளா்கள் நீதிமன்றம் சென்ால் அந்தப் பணி தடைபட்டது. இடைநிலை ஆசிரியா்கள் குறித்து அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை. இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களையும் சோ்த்து நிரப்புவதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது.
விசிக தலைவா் திருமாவளவனுக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு என்பது அண்ணன்-தம்பி உறவைப் போன்றது.
அதுமட்டுமல்லாது திமுக கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. இந்தக் கூட்டணியில் பிளவு வராதா எனப் பலா் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு கட்டாயம் இடம் கொடுக்க முடியாது. திருமாவளவன் சுயமரியாதை மிக்கவா். அவரை மதிக்கக் கூடியவராக நாங்கள் உள்ளோம் என்றாா் அமைச்சா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...