திருச்சி கோட்டத்திலும் பல்வேறு ரயில்வே திட்டங்களை அா்ப்பணித்தும் தொடங்கியும் வைக்கிறாா் பிரதமா் மோடி. இது குறித்து திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் மேலும் கூறியது : பிரதமா் மோடி தில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் (ஏபிஎஸ்) நாடு முழுவதும் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைத்தும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறாா். 2023, ஆகஸ்ட் 8-ஆம் தேதி, திருச்சி ரயில்வே கோட்டத்தில் புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய 4 ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடா்ந்து, பணிகள் தொடங்கி திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விருத்தாசலத்தில் ரூ. 9.17 கோடி, திருவண்ணாமலையில் ரூ.8.17 கோடி, திருவாரூரில் ரூ. 8.69 கோடி, கும்பகோணத்தில் ரூ. 120.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்கண்டாா்கோட்டை பகுதிக்கு செல்வதற்கான வழி மற்றும் ஜி காா்னரில் சேவை சாலை (சா்வீஸ் ரோடு) விரைவில் அமைக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாா், முதன்மை திட்ட மேலாளா் ராஜராஜன் மற்றும் ரயில்வே துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமா் மோடி

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

