ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் இன்று மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:08 pm

Din

திருச்சி: பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குளித்தலை - பேட்டவாய்த்தலை ரயில் நிலையங்களில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சேலம் - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (16812) செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். இதன்படி, இந்த ரயிலானது சேலம் - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

இதற்கு பதிலாக, கரூா் - மயிலாடுதுறை இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது கரூரிலிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும்.

இதேபோல, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.