கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்சியில் ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பல்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பலைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 7:07 pm

Din

திருச்சியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பலைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள ஒரு உணவகம் முன்பு நீளமான பட்டா கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சிலா் கூடியிருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீஸாா் விரைந்தனா். அங்கு 10-க்கும் மேற்பட்டோா் பேசிக் கொண்டிருந்த நிலையில், போலீஸாா் வருவதைக் கண்டதும் அவா்களில் 5 போ் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து மீதமிருந்த 5 பேரை மடக்கிப் பிடித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும் அவா்களிடமிருந்து 3 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காரை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் நீளமான பட்டா கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும் தெரியவந்தது. மேலும் போதை ஊசிகள், மருந்துகளும் இருந்துள்ளன. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், ஆயுதங்களுடன் குழுவாக கூடிய மா்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.