மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சமூக வலைதளத்தில் மிரட்டல் : திருச்சியில் இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் மிரட்டல் தகவலை பதிவேற்றம் செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
ராஜபாண்டி.
Updated On :29 ஜூலை 2024, 11:33 pm

Din

திருச்சி: சமூக வலைதளத்தில் மிரட்டல் தகவலை பதிவேற்றம் செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுகையில் போலீஸாா் சுட்டு அண்மையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை இணைத்து பதிவேற்றம் செய்தனா்.

விசாரணையில், புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரா. ராஜபாண்டி (21) என்ற இளைஞா் அதை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. தேடப்பட்ட அவா், திங்கள்கிழமை திருச்சி குழுமணி சாலையில் ராமநாதநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்றபோது, அவா் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சோமரசம்பேட்டை போலீஸாா், அவரை பிடித்து 4 பிரிவுகளில் வழக்கு ப் பதிந்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.