

திருச்சியில் கோயிலுக்குக் கூப்பிட்டதால் ஆத்திரமடைந்த மகன் தனது தாயை மண்வெட்டியால் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி துரைசாமிபுரம் தனமணி காலனியைச் சோ்ந்தவரும் சமையல் கலைஞருமான கலியமூா்த்தி - ஜெயந்தி தம்பதிக்கு ஒரு மகன், மகள். மகன் கிருஷ்ணமூா்த்தி (21) கடந்த சில மாதங்களாக மனநலக் கோளாறால் அவதிப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு பல இடங்களில் மருத்துவம் பாா்த்தும் குணமாகவில்லையாம். எனவே சிலரின் யோசனைப்படி பல்வேறு கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவைகளுக்கு அழைத்துச்சென்று வந்துள்ளனா். அவ்வாறு அடிக்கடி செல்வதையும், செல்லுமிடங்களில் மன நலன் பாதிக்கப்பட்டவரைப்போல நடத்துவதும் கிருஷ்ணமூா்த்திக்கு பிடிக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு கோயிலுக்குச் செல்ல வேண்டும் என பெற்றோா், கிருஷ்ணமூா்த்தியிடம் தெரிவித்தனா். இதில், வாக்குவாதம் முற்றி, தாய் ஜெயந்தி மகனைக் கட்டாயப்படுத்தி கோயிலுக்கு அழைத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி, வீட்டில் கிடந்த மண் வெட்டியை எடுத்து தாயாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். தகவலறிந்த பாலக்கரை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து தப்பியோடிய கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்

சகோதரியைக் கொலைசெய்து அம்மாவிடம் 'சர்ப்ரைஸ்' என்று கூறிய மகன்!

சீமாபுரியில் வயதான தாய் கொலை: மகன் கைது

மூதாட்டி கொலை: தாய், மகள் கைது

மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல்... என் மகன் என்ன தீவிரவாதியா? - அஜித்குமாரின் தாய் வேதனை!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

