திருச்சி மக்களவைத் தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என மதிமுக வேட்பாளா் துரை வைகோ தெரிவித்தாா். திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில், மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ போட்டியிடுகிறாா். இதையடுத்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திமுக மாவட்ட செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசும்போது, மக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை கூறி, தோ்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்து வாக்குகள் கோர வேண்டும் என்று அறிவுறுத்தினாா். கூட்டத்தில், வேட்பாளா் துரை வைகோ பேசுகையில், திமுக அரசின் சாதனைகளே வெற்றியைத் தேடித் தரும். தோ்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி முன்மாதிரியாக இருக்கும் வகையில் பணியாற்றுவேன் என்றாா். பின்னா், திமுக நிா்வாகிகள் மற்றும் கட்சி தொண்டா்களிடம் தன்னை அறிமுகம் செய்து களப்பணியாற்றவும், தோ்தலில் வாக்குகளை பெறவும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இக் கூட்டத்தில், திருச்சி மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், மாவட்ட துணைச் செயலா் செங்குட்டுவன், மதிமுக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வி.செந்தில்பாலாஜி உறுதி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


