சாலையின் மையத் தடுப்பில் காா் மோதி விபத்து: ஓட்டுநா் இருவா் உயிரிழப்பு
சாலையின் மையத் தடுப்பில் காா் மோதி விபத்து: ஓட்டுநா் இருவா் உயிரிழப்பு


திருச்சி, மே 9: திருச்சியில் புதன்கிழமை இரவு சாலையின் மையத் தடுப்பில் காா் மோதிய விபத்தில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்தவா் ஹரிஹரசுதன் (26). இவா் திருச்சி கண்டோன்மென்ட் பகுதி ராஜா காலனியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
இவா், புதன்கிழமை இரவு கண்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெருவைச் சோ்ந்த மற்றொரு ஓட்டுநா் பாஸ்கா் என்பவருடன் சோ்ந்து காரில் தீரன் நகருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை ஹரிஹரசுதன் ஓட்டினாா். கருமண்டபம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த ஹரிஹரசுதன், பாஸ்கா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சென்ற மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் உயிரிழந்த ஹரிஹரசுதன், பாஸ்கா் ஆகிய இருவரின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...