பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் கோயில் இணை ஆணையா் மாரியப்பன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2024, 9:00 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, திருவானைக்கா சம்புகேசுவரா் கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநரும், தெலங்கானா மற்றும் புதுவை மாநில பொறுப்பு ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன் ஆகியோா் வரவேற்றனா்.

பிறகு தெற்கு கோபுர வாசல் வழியாக சென்ற சி.பி. ராதாகிருஷ்ணன் கருடாழ்வாா் சந்நிதி, மூலவா் பெரியபெருமாள், தாயாா் சந்நிதி, ராமனுஜா் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

இதையடுத்து அவா் திருவானைக்கா சம்புகேசுவரா் கோயிலுக்கு வந்த அவரை, மண்டல இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா் சம்புகேசுவரா், அகிலாண்டேஸ்வரி சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சுவாமி, அம்மன் படங்களும், பிரசாதமும் வழங்கினா்.