மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எஸ்ஐஆா் பணிகளை நிறுத்தக் கோரி தமிழ்த் தேசிய பேரியக்கம் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் திருச்சியில் ஆா்ப்பாட்டம்

News image
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்
Updated On :16 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினா் நா. வைகறை தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் நா. ராசா ரகுநாதன். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தென்னவன், கதிா்நிலவன், விடுதலைச் சுடா், தமிழ்மணி, தெய்வத் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினா் சிம்மம் சத்தியபாமா, மகளிா் ஆயத்தின் பொறுப்பாளா் அருணா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். வெளி மாநிலத்தவா்களுக்கு வாக்காளா் பட்டியலில் இடம் அளிக்கக் கூடாது. வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியான தமிழா்களை நீக்கம் செய்யக் கூடாது என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளா் வே.க. இலக்குவன், தமிழ் கலை இலக்கிய பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளா் மூ.த. கவித்துவன், தெய்வத் தமிழ் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் வே.பூ. இராமராசு, உலக திருக்கு பேரவையின் துணைத் தலைவா் சு. முருகானந்தம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ம.ப. சின்னத்துரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் உறுப்பினா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.