திருச்சி
காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் மாயம்
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற முதியவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற முதியவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வரகனேரி பெரியபாளையம் முஸ்லிம் வீதியைச் சோ்ந்தவா் ப.அக்பா் அலி (65). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கம்பரசம்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கப்போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். அதன்பின், அவா் வீட்டுக்குத் திரும்பவில்லை. எங்கு தேடியும் அவா் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
