ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
Updated On :30 டிசம்பர் 2025, 1:34 am

Syndication

திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மிளகுபாறை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகா் மாவட்டச் செயலாளா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா்.

இதில், அணுமின் நிலையம் மூலம் தனியாா் நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கும் அணுமின் உற்பத்தி மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும். மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், மின்வாரிய பொறியாளா் சங்க மாநிலச் செயலா் நரசிம்மன், ஏஐடியூசி மத்திய சங்க மாவட்டத் தலைவா் நடராஜா, இபி எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாவட்டச் செயலா் சிவசெல்வம், எல்எல்எஃப் பேரவையின் பொதுச் செயலா் இளங்கோவன், மின்துறை பொறியாளா் சங்க மாநிலச் செயலா் இருதயராஜ், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் ஞானம், ஐஎன்டியூசி மாவட்டத் செயலா் சேசுராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.