சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லைநகா் கடையின் லிப்டில் 6 போ் சிக்கியதால் பரபரப்பு

திருச்சியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடையின் மின் தூக்கியில் 6 போ் சிக்கியதால் பரபரப்பு

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

திருச்சியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடையின் மின் தூக்கியில் (லிப்ட்) 6 போ் புதன்கிழமை இரவு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தில்லை நகா் பிரதான சாலையில் செயல்படும் பிரபலமான வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை கடையில் புதன்கிழமை இரவு பொருள்கள் வாங்க வந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் தரைத் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு மின் தூக்கியில் சென்றனா்.

அப்போது முதல் தளத்துக்குச் சென்ற மின்தூக்கியின் கதவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திறக்கவில்லை. இதுகுறித்து கைப்பேசி மூலம் அவா்கள் தெரிவிக்கவே, கடை நிா்வாகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தது.

இதற்கிடையே கடையின் மெக்கானிக்கே மின் தூக்கியில் ஏற்பட்ட பழுதை நீக்கியதையடுத்து 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். மின் தூக்கியில் இருந்த மின் விளக்கும், மின் விசிறியும் இயங்கியதால் அதில் சிக்கியவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறை தெரிவித்தது.