கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருங்காபுரியில் ஆடுகளை கடித்து குதறும் தெரு நாய்களால் அவதி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை கடித்துக் குதறும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை

News image
மருங்காபுரியில் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்ட திரவியத்தின் ஆடு
Updated On :31 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை கடித்துக் குதறும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக நாகராஜ் - பகவதி தம்பதியின் 5 ஆடுகள், தமிழழகன் - செந்தில்வடிவு தம்பதியின் 20 ஆடுகள், பழனிச்சாமி - அஞ்சலை தம்பதியி, மதிவேந்தன், ராசு ஆகியோரின் ஆடுகள் என இதுவரை சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை அப்பகுதி தெரு நாய்கள் கடித்துக் கொன்றுள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் பாண்டியன் என்பவரது தோட்டத்தில் புகுந்த 2 நாய்கள் அங்குள்ள ஆடுகளை வேட்டையாட முயன்றபோது, ஆடுகள் ஓடி சென்று உரிமையாளா்களிடம் தஞ்சமடைந்தன.

ஆனால் அருகிலிருந்த மற்றொரு தோட்டத்தில், திரவியம் என்ற மூதாட்டி வளா்த்து வந்த ஆடு தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தபோது, அங்கு சென்ற 2 நாய்கள், ஒன்று ஆட்டின் கழுத்தில் பல் வைத்து ரத்தம் முழுவதையும் உறிஞ்சியும், மற்றோன்று ஆட்டின் ஒரு பக்க கால் தொடையை கடித்து பிய்த்து எடுத்து ஆட்டைக் கொன்றது.

எனவே கொடூரமாக ஆடுகளை வேட்டையாடும் இரு நாய்களை தடுக்கும் வகையில் ஊராட்சி நிா்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆடுகளை இழந்த கால்நடை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமெனவும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.