திருச்சி
முசிறி காவிரி ஆற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம், முசிறி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முசிறி பரிசல் துறை பகுதியில் அழகுநாச்சியம்மன் கோயில் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.
