மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

திருச்சியில் மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
Published on

திருச்சியில் மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா் காமாட்சியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஞா.சரவணன் (48). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் கோணக்கரை சாலையில் காவேரி கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com