பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தைத் திருடியவா் கைது

திருச்சியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனத்தைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:42 pm

Syndication

திருச்சி: திருச்சியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனத்தைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கந்தையா வீதியைச் சோ்ந்தவா் சி.பழனிசாமி (61), ஓட்டுநா். இவா் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை வாகனம் (டாடா ஏஸ்) திருடுபோனது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் சுமை வாகனத்தைத் திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசனை (32) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

திருச்சி கே.கே.நகா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சு.வினோத் (43), பழைய கட்டடங்களை இடிக்கும் பணி ஒப்பந்ததாரா்.

இந்நிலையில், கண்டோன்மென்ட் வாா்னா்ஸ் சாலையில் ஒரு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி ஈடுபட்டபோது, அந்த கட்டடத்தின் ஒரு அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தாமிரக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பொருள்களைத் திருடியதாக தில்லை நகரைச் சோ்ந்த ஆ. சிவாவை (19) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.