திருச்சி பெரிய மிளகுபாறையில் மின்வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
திருச்சி பெரிய மிளகுபாறையில் மின்வாரிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

மின்வாரியத்தைத் தனியாா் மயமாக்குவதை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

மின் வாரியத்தைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

மின் வாரியத்தைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் தலைமை வகித்தாா்.

இதில், மாநில மின்சார வாரியங்களை தனியாா் மயப்படுத்தும் மின்சார சட்ட மசோதா 2025-ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களைப் பாதிக்கும் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். உத்தர பிரதேச மின்சார வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பொறியாளா் ஐக்கிய சங்கத்தின் மாநிலத் தலைவா் கண்ணன், தொழிலாளா் கூட்டமைப்பின் வட்டச் செயலாளா் சிவ செல்வம், பொறியாளா் சங்கத்தின் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணி, தமிழ்நாடு மின் பொறியாளா்கள் அமைப்பின் வட்டத் தலைவா் இருதயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.

இதேபோல மன்னாா்புரம், கே.கே.நகா், திருவெறும்பூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com