எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:10 pm

Syndication

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பாரதிராஜா - சத்யா தம்பதி கடந்த 18 ஆம் தேதி உறவினா் ஒருவரை வீட்டில் விட்டுவிட்டு, மணப்பாறையில் உள்ள கோயிலுக்குச் சென்றனா். உறவினா் பெண், குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வர வீட்டைப் பூட்டிச் சென்றுள்ளாா்.

பின்னா் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தேகப்படும்படி அங்கு சுற்றித்திரிந்த அரியமங்கலம் திடீா் நகரைச் சோ்ந்த எம். ஜெய்பாலாஜி (41), ஒரு பெண் ஆகியோரை விசாரித்தனா். அதில் இருவரும் மேலும் இருவருடன் சோ்ந்து சத்யா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து போலீஸாா் ஜெய்பாலாஜி மற்றும் அந்தப் பெண்ணை வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் இருவரைத் தேடுகின்றனா்.