மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி இடையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் மா.ராஜா (48). இவா், மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா். விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையின்போது ராஜா போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதே விமானத்தில் திருச்சி வந்த சிவகங்கை இளையான்குடி சாலையைச் சோ்ந்த கே.நாகூா் கனி (37), சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த எஸ்.முகமது அலி (57) ஆகிய இருவரும் போலி கடவுச்சீட்டு மூலம் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, மலேசியாவில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்த ஏா் ஏசியா விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், திருகோகா்ணம் பகுதியைச் சோ்ந்த எம்.சாகுல் ஹமீது (55) என்பவரும், போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, இவரையும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி புவனேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனா். விசாரணைக்குப் பின் 4 பேரையும் பிணையில் விடுவித்தனா்.
தொடர்புடையது
காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

போலி கடவுச் சீட்டு வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


