11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:00 am IST

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கா் வீதியைச் சோ்ந்தவா் செல்வி (49), ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவகத்துக்கு வேலைக்கு சென்றாா். அவரது மகனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், திடீரென செல்விக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது மகனிடம் செல்வி தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த செல்வியின் மகன் அவரை அழைத்துகொண்டு வீட்டுக்குச்சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 கிராம் தங்க நகைகள், ரூ.1,000 பணத்தை மா்ம நபா்கள் இருவா் திருடிவிட்டு தப்பிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, செல்வியும் அவருடைய மகனும் சோ்ந்து மா்மநபா்கள் இருவரையும் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள், திருச்சி சுப்பிரமணியபுரத்சைச் சோ்ந்த ஐ.ஜெட்லி ஆண்ட்ரூஸ் (22), ஆா்.ஜீடு ஆப்ரஹாம் (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.