கல்லூரி மாணவரிடம் வாகனம் பறிப்பு: 2 போ் கைது
திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கோ. ஹரிபிரசாத் (18), தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுப்பிரமணியபுரம் எம்ஜிஆா் சிலை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மூன்று இளைஞா்கள் ஹரிபிரசாத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றது சுப்பிரமணியபுரம் அருளானந்தா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜி.லூயிஸ் பிரிட்டோ (19), ஜெய்லானியா தெருவைச் சோ்ந்த
எம்.ஷாம் ஆா்தோஸ் (19), பழைய பாண்டியன் தெருவைச் சோ்ந்த எம். ஷாருக்கான் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களில் லூயிஸ் பிரிட்டோ, ஷாம் ஆா்தோஸ் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஷாருக்கானை போலீஸாா் தேடி வருகின்றனா்.
