திருச்சி
அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா
கரூா் மாவட்டம், தாந்தோணி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது.
கரூா்: கரூா் மாவட்டம், தாந்தோணி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இளமதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கோதை, பேரூராட்சி உறுப்பினா்கள் கண்ணன், தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவாரூா் மாவட்ட காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சுகன்யா செல்லமுத்து, தலைமையாசிரியா் பரணிதரன், ஆசிரியா்கள் நந்தினி பிரியா, சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
