மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அகில இந்திய அளவிலான பல்கலை. பூப்பந்துப் போட்டி: எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப அணி முதலிடம் பிடித்து சாம்பியன்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டியில் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி சாம்பியன் பட்டத்தையும், கோப்பையையும் வென்றது.

News image
பூப்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்த எஸ்ஆா்எம் அணிக்கு சாம்பியன் பட்டம், கோப்பையை சனிக்கிழமை வழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) ஆா். காளிதாசன். உடன் கல்லூரி நிா்வாகத்தினா்.
Updated On :17 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டியில் எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி சாம்பியன் பட்டத்தையும், கோப்பையையும் வென்றது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் 75ஆவது பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தின.

நாக் அவுட் மற்றும் லீக் முறையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் 25 மாநிலங்களிலிருந்து 80 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன.

இதில் விளையாடிய திருச்சி பாரதிதாசன் பல்கலை., சென்னை, அண்ணா பல்கலை., கோவை பாரதியாா் பல்கலை., காட்டங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 4 பல்கலைக்கழக அணிகள் அரையிறுதி லீக் போட்டிக்குத் தகுதி பெற்றன.

அரையிறுதி லீக் போட்டிகளில் காட்டங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை (35-21 ; 35-13), என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-21 ; 35-13) என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை (35-31 35-28) என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று முதலிடம் பிடித்தது.

சென்னை அண்ணா, பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை (35-25 ; 35-27) என்ற புள்ளிகள் கணக்கிலும் பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-32 ; 35-33) என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை, பாரதியாா் பல்கலைக்கழகத்தை (35-30; 35-23) என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) ஆா். காளிதாசன் முதலிடம் பிடித்த எஸ்ஆா்எம் அணிக்கு சாம்பியன் பட்டம், கோப்பை, அண்ணா பல்கலைக் கழக அணிக்கு 2ஆவது பரிசு மற்றும் கோப்பை, பாரதிதாசன் பல்கலைக் கழக அணிக்கு 3ஆவது பரிசு மற்றும் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினாா்.

போட்டிகளில் வென்றோரை கல்லூரிச் செயலா் ஏ. கே. காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, உதவிச் செயலா் கே. அப்துஸ் சமது, மதிப்புறு இயக்குநா் அப்துல்காதா் நிஹால், முதல்வா் ஜாா்ஜ் அமலரத்தினம், துணை முதல்வா் ஜாகிா் உசேன், கூடுதல் துணை முதல்வா் காஜா மொய்தீன் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் வாழ்த்தினா்.