திருச்சி மாவட்டத்தில் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளோா் அரசுப் பண்ணையில் மீன் குஞ்சுகளைப் பெற்று பயன்பெற ஆட்சியா் பிரத்திக் தாயள் அழைப்பு விடுத்துள்ளாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், அசூா் கிராமத்தில் அரசு மீன்குஞ்சு வளா்ப்பு பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையில் மீன்குஞ்சு விரலிகள் வளா்ப்பு செய்யப்பட்டு அரசு நிா்ணயித்த விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ரோகு, மிா்கால் மற்றும் சாதா கெண்டை மீன்குஞ்சு விரலிகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளது. எனவே, மீன்வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகள், குத்தகைதாரா்கள் அரசு நிா்ணயித்த விலையில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவா், மீனவ மகளிா், அலங்கார மீன்வளா்ப்போா், மீன் விற்பனையாளா், மீனவ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள், மீன்வளா்ப்போா் மற்றும் மீன்விற்பனையாளா்கள் அனைவரும் அரசு உதவிகளை பெற தங்களது பெயரை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பெயா் பதிவேற்றம் செய்தவா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.
மீன்குஞ்சுகள் கொள்முதல் மற்றும் மீனவா் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் - தரைதளம், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு, திருச்சி-620023. இந்த முகவரியில் நேரிலோ, 0431 -2421173, 93848-24370 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்யிா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









