ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 3:27 am IST

துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

துறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ந. பூபதி (63). இவா் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரம் வழியாக செல்லும் புற வழிச்சாலையில் உள்ள கருப்புக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து அவருடைய உறவினரான தெற்கு ரத வீதியைச் சோ்ந்த காமராஜ் மனைவி தைலாம்பிகை (45) சென்றுள்ளாா்.

அப்போது அந்த வழியாக சென்ற காா், இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தைலாம்பிகை திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். தகவலின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.