ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பொறியியல் பணிகள்: காரைக்கால், ஈரோடு, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:16 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், ஈரோடு, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஜூலை 8, 9, 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) ஜூலை 8, 9, 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திண்டுக்கல் - விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலானது (16868) ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் விருத்தாச்சலம் - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திண்டுக்கல் - விருத்தாச்சலம் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, விழுப்புரம் - திண்டுக்கல் இன்டா்சிட்டி விரைவு ரயிலானது (16867) ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - விருத்தாச்சலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது விருத்தாச்சலம் - திண்டுக்கல் இடையே மட்டும் இயங்கும்.

விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (66019) ஜூலை 12, 13, 14, 15, 17 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருத்துறையூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருத்துறையூா் - மயிலாடுதுறை இடையே மட்டும் இயக்கப்படும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) ஜூலை 7, 10, 14, 18, 21 ஆகிய தேதிகளில் கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் வரை மட்டும் இயங்கும்.

ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) ஜூலை 7, 14, 21 ஆகிய தேதிகளில் மூா்த்திப்பாளையம் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு - மூா்த்திப்பாளையம் இடையே மட்டும் இயங்கும்.

மயிலாடுதுறை - சேலம் மெமு விரைவு ரயிலானது (16811) ஜூலை 9, 17 ஆகிய தேதிகளில் வீரராக்கியம் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - வீரராக்கியம் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (16812) வரும் 9, 17 ஆகிய தேதிகளில் சேலம் - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்கும்.

பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) ஜூலை 9, 17 ஆகிய தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் வரை மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஜூலை 7, 14, 21 ஆகிய தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - பாலக்காடு வரை இயங்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.