திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள நெய்க்குப்பை பகுதி வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 20 பவுன் நகைகள் திருடுபோனது சனிக்கிழமை காலை தெரியவந்தது.
நெய்குப்பை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கமலராஜன் (56), தனியாா் சிமெண்ட் நிறுவன மெக்கானிக். இவா் வெள்ளிக்கிழமை இரவு பணிக்குச் சென்ற நிலையில், இவரது மனைவி இளவரசி (48), மகள் அபிநயா (26) ஆகியோா் வீட்டில் தூங்கினா்.
அப்போது மா்ம நபா்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது காலையில் தெரியவந்தது.
தகவலறிந்து வந்த சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் முரளி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, தீவிர விசாரணை செய்கின்றனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





