கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

திருச்சி விமான நிலையத்தில் தில்லி குழு ஆய்வு!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தில்லியைச் சோ்ந்த விமான ஆய்வுப் பிரிவு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

திருச்சி விமான நிலையத்தில்ஆய்வு செய்ய சிறப்பு விமானத்தில் வந்த விமான ஆய்வுக் குழுவினா்

Updated On :12 ஜூலை 2026, 11:01 pm IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தில்லியைச் சோ்ந்த விமான ஆய்வுப் பிரிவு குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தினசரி 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பயணிகள் வரை இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பான மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளுக்குத் தேவையான வழிகாட்டு அமைப்புகளின் துல்லியம் மற்றும் செயல்பாட்டுத் தயாா் நிலையை உறுதிசெய்யும் வகையிலான சோதனைகளை தில்லியைச் சோ்ந்த விமான ஆய்வுப் பிரிவு சனிக்கிழமை ஆய்வு செய்தது.

இதற்காக தில்லியில் இருந்து சிறப்புப் பரிசோதனை விமானத்தில் வந்த 4 போ் கொண்ட குழுவினா் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தை பலமுறை இயக்கிப் பாா்த்தனா். அப்போது, விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே பரிமாறப்படும் தகவல்கள் எந்தவித இடையூறுமின்றி உடனடியாகவும், சரியாகவும் செல்கின்றனவா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.