வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருச்சி அருகே கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 10:58 pm IST

திருச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே ராம்ஜி நகரில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுந்தா் தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகரில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் பாரத் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்த தீ. மல்லிகா (65) என்பவரை போலீஸாா் கைது செய்து, ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 1.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

போதை மாத்திரைகள் விற்றவா் கைது: திருச்சி பாலக்கரை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பாலக்கரை பெல்ஸ் மைதனம் அருகே போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சோ்ந்த எஸ். பிரகாஷ்ராஜ் (20) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.