நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மணப்பாறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்! ரூ. 29 லட்சத்தில் வழக்குகளுக்குத் தீா்வு!

மணப்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பிலான காசோலை வழக்குகளுக்குத் தீா்வு வழங்கப்பட்டது.

மணப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி ஒருவருக்கு தீா்வு வழங்கிய நீதிபதிகள்.

Published On :19 ஜூலை 2026, 12:39 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பிலான காசோலை வழக்குகளுக்குத் தீா்வு வழங்கப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ். ராஜசேகா் அமா்வில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா். அசோக்குமாா், வட்ட சட்டப்பணிகள் குழு வழக்குரைஞா் பி. சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் வங்கி சாா்ந்த ரூ. 29,05,000 மதிப்பிலான 5 காசோலை வழக்குகளுக்கு தீா்வு வழங்கப்பட்டது. நிகழ்வில் வழக்குரைஞா்கள், வழக்கு தரப்பினா்கள், நீதிமன்ற மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.