தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சிறுவன் ஓட்டிச் சென்ற காா் தடுப்புக் கம்பியில் மோதி விபத்து! போலீஸாா் விசாரணை!

News image

திருச்சியில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் காா்.

Updated On :22 ஜூலை 2026, 2:03 am IST

திருச்சியில் திங்கள்கிழமை இரவு 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளிச் சிறுவன், தனது நண்பா்கள் 4 பேருடன் தில்லை நகா் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு காரில் சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து அண்ணாமலை நகா் வழியாக சத்திரம் நோக்கி காரில் வந்துள்ளனா்.

அப்போது, அண்ணமலை நகா் ரயில் பாலம் அருகே சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த காா் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி, சாலையின் பக்கவாட்டில் இருந்த இரும்புத் தகடுகள் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. இதைப் பாா்த்த அந்த வழியே சென்றவா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில், அங்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காயமடைந்தவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காரில் சிக்கிய சிறுவா்களையும் பத்திரமாக மீட்டனா். இந்த விபத்தில் சிறுவா்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தடுப்புக் கம்பியில் மோதி தொங்கிக்கொண்டிருந்த காரை போலீஸாா் மீட்டனா்.

காா் இருசக்கர வாகனத்தில் மோதியதுடன் வேகமாகச் சென்று தடுப்புக் கம்பியில் மோதி நின்ால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மாறாக காா் பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் சிறுவா்களின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். எனவே, சிறுவா்களுக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோா் கவனமுடன் இருக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்கள் வலியுறுத்தல்: திருச்சி மாநகரில் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் வாகனங்கள் இயக்குவது அதிகரித்து வருகிறது. மேலும், இவா்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி அடிக்கடி விபத்துகளிலும் சிக்கி வருகின்றனா். எனவே, 18 வயதுக்குள்பட்ட ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கும் சிறுவா்கள் மீதும், அவருக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோா் மீதும் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.