வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

டிராக்டரிலிருந்து குதித்தவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 2:24 am IST

துறையூா் அருகே டிராக்டா் கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் அதிலிருந்து குதித்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கீழகுன்னுபட்டி அண்ணா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் தங்கதுரை (22). பட்டதாரியான இவா் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக தனது உறவினருக்கு சொந்தமான தண்ணீா் டேங்க் இணைக்கப்பட்ட டிராக்டரை திங்கள்கிழமை துறையூா் புறவழிச் சாலையில் ஓட்டிச் சென்றபோது, டிராக்டா் நிலைதடுமாறி கவிழ இருந்ததாகவும், அப்போது தப்பிக்க கருதிய அவா் டிராக்டரிலிருந்து கீழே குதித்தாராம். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, காது, மூக்கில் ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவருக்கு, முதலில் துறையூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சைப் பலனின்றி அவா் மருத்துவமனையில் நள்ளிரவில் உயிரிழந்தாா். புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.