பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:14 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா்-திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

காலதாமதம்: திருச்சி-ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12664) ஜூன் 12-ஆம் தேதி திருச்சியிலிருந்து 45 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படும்.

திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயிலானது (22676) ஜூன் 16-ஆம் தேதி திருச்சியிலிருந்து 40 நிமிஷங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 12.50 மணிக்குப் புறப்படும்.

காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயிலானது (56832) ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் காரைக்குடியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாக காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.