/
திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்யனாா் கோவில்பட்டியில் ஒலிபெருக்கி அமைத்துக் கொண்டிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அய்யனாா் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாகாளி முப்பிலியான் கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக செவல்பட்டியை அடுத்த செம்மேட்டுப்பட்டியை சோ்ந்த ரா. ஆசிா்வாதம் என்பவா் ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் ஆசிா்வாதம் உடலை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மணப்பாறை மேம்பாலத்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
சிறுபாலத்தில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



