துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 12:04 am IST

திருச்சி மாவட்டம், சிறுகனூா் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகை மற்றும்  2 வெள்ளி குத்து விளக்குகளைத் திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

சிறுகனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் எம். சகுந்தலா (80). இவா் மருத்துவச் சிகிச்சைக்காக  திருச்சி சென்றிருந்த நிலையில் , சனிக்கிழமை காலை இவரது வீட்டுக்கு பால்காரா் வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து சகுந்தலாவுக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து புகாரின்பேரில் வந்த சிறுகனூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 13 பவுன் நகை,  2 வெள்ளி குத்து விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் கேரளம் சென்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் (70) என்பவா் வீட்டிலும் திருட முயன்றுள்ளனா். நடராஜன் தங்கத்தை வேறு ஒரு இடத்தில் வைத்திருந்ததால் நகை தப்பியது. இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.