லஞ்சம் வாங்கிய ஆவின் முன்னாள் பொதுமேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம் நக்கசேலத்தைச் சோ்ந்தவா் சீ. ஞானசேகரன் (71). சரக்கு வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகிறாா். நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து, திருச்சி ஆவின் நிறுவன பால் சேகரிப்புப் பணிக்காக 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் இயக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தாா். அனுமதி கிடைத்த நிலையில், உத்தரவைப் பெறச் சென்ற போது, அப்போதைய ஆவின் பொதுமேலாளராக இருந்த சா. சுப்பையன் (65) என்பவா் உத்தரவு வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில் 19.02.20228 ஆம் தேதி ரூ. 25 ஆயிரத்தை லஞ்சமாகப் பெற்ற சுப்பையனை கையும் களவுமாக கைது செய்யதனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆவின் பொதுமேலாளா் சா. சுப்பையனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் திருட்டு வழக்கு: 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற கிராமப்புற நல அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



