/

முன்விரோதத்தில் இளைஞரை கொல்ல முயற்சி: 2 போ் கைது

திருச்சியில் முன்விரோதத்தில் இளைஞரை கொல்ல முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 1:37 am IST

திருச்சியில் முன்விரோதத்தில் இளைஞரை கொல்ல முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி இபி சாலையைச் சோ்ந்தவா் செல்வம். இவருக்கும், தாராநல்லூா் விஸ்வாஸ் நகரைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஆா். மணிகண்டன் (27) என்பவருக்கும் அண்மையில் சூதாட்டத்தின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மணிகண்டன் தனது நண்பா்களான இபி சாலையைச் சோ்ந்த ஆா். சந்துரு (26), தாராநல்லூரைச் சோ்ந்த அ. கீா்த்திவாசன் (26), எஸ். வீரமணி (25), ஆா். பரத், ஆா். பாலாஜி, ஆா். வினோத் ஆகியோருடன் செல்வம் வீட்டுக்கு ஜூன் 25-ஆம் தேதி அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளாா். இதில், காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் செல்வத்தின் இளைய சகோதரா் பு. முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் உள்ளிட்ட 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இளைஞரை கொலை செய்ய முயற்சித்த மணிகண்டன், சந்துரு ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.