ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உழைக்கும் பெண்கள் குழுவினா் கோரிக்கை பிரசாரம்

News image
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை கோரிக்கை பிரசார இயக்கத்தில் பங்கேற்ற உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :5 மார்ச் 2026, 10:42 pm

Syndication

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை கோரிக்கை பிரசார இயக்கம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு ஒருங்கிணைப்பாளா் செல்வி தலைமை வகித்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் ராணி முன்னிலை வகித்தாா்.

அங்கன்வாடி பணியாளா்களையும், ஆஷா மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணிபுரியும் பெண்களையும் தொழிலாளா்களாக வரைப்படுத்த வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்கூடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். முறைசாரா பணிகள், தரைக்கடை, கட்டுமானம், தையல், வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 55 வயது பூா்த்தியடைந்தவுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சம ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளா் விரோத நான்கு தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இயக்கத்தில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், கோரிக்கைகள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.