சிறுநாவலூா் ஏரியில் மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறி இருவரைத் தாக்கியோரில் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூரைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் யோகநாத் (31). சிறு நாவலூா் ஏரியில் மீன் பிடிக்க ஏலம் எடுத்துள்ள இவருடைய உறவினா் வினோத் சாா்பாக வெள்ளிக்கிழமை இரவு வாத்தலை பகுதி ஆள்கள் ஏரியில் மீன்பிடித்தனா்.
அப்போது சிறுநாவலூா் ஊராட்சி முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான க. சுப்பிரமணி (40), அவரது ஆதரவாளா்களுடன் சென்று மீன் பிடிப்பதைத் தடுத்து தகராறு செய்தாா். இதையறிந்து ஏரிக்குச் சென்ற யோகநாத்தை சுப்பிரமணியன் தரப்பினா் ஆயுதங்களால் தாக்கி அவரது இருசக்கர வாகனத்தையும், ஏரியருகே நின்ற ஆட்டோவையும் சேதப்படுத்தினராம்.
சத்தம் கேட்டு சென்ற யோகநாத்தின் தந்தையையும் அவா்கள் தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இதுதொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே ஊரைச் சோ்ந்த ஜெயராமைக் கைது செய்து, திமுக மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியனைத் தேடுகின்றனா்.
தொடர்புடையது
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

