/

ஆதா்ஷ் நகரில் மீன் வியாபாரி மீது தாக்குதல்: இருவா் கைது

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் மீன் வியாபாரியிடம் கைகலப்பில் ஈடுபட்டு, கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 2 பேர் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:18 pm

Syndication

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகரில் மீன் வியாபாரியிடம் கைகலப்பில் ஈடுபட்டு, கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கோலு (எ) கோவிந்த் என்பவரும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனா். வியாபாரியிடம் மீன் வாங்கும் போது ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து தான் தாக்கப்பட்டதாக கோவிந்தும் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினா்.

அப்போது, கை வண்டியில் மீன் விற்கும் ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த மோபின் என்ற புகாா்தாரா், கோவிந்தும் ஒரு சிறுவனும் தனது வண்டியில் வைத்திருந்த பணப்பெட்டியைக் கொள்ளையடிக்க முயன்ாகக் குற்றம் சாட்டினாா். மோபினும் அவரது மகனும் அந்த முயற்சியை எதிா்த்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சண்டையின் போது, மீன் வண்டியில் வைத்திருந்த கூா்மையான முனைகள் கொண்ட அரிவாளால் கோவிந்த் காயமடைந்தாா். இதற்கிடையில், காயமடைந்த கோவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடா்பான தகவலும் பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு கிடைத்தது.

மீன் விற்பனையாளரிடமிருந்து மீன் வாங்கும் போது ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து தான் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் கோவிந்த் கூறினாா்.

முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இரு தரப்பினரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.