அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையம் வழியே ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:58 pm

இளைஞரிடம் இணையம் வழியே ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (31), திருச்சி தனியாா் நிறுவன ஊழியரான இவா் கூடுதல் வருமானத்துக்காக பகுதிநேர வேலை தேடி வந்தாா்.

அப்போது கட்செவி அஞ்சல் வாயிலாக பகுதிநேர வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவா் அந்தச் செயலியில் பதிவு செய்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அமானுல்லாவை அந்த பகுதிநேர வேலை கொடுத்த நிறுவனத்தைச் சாா்ந்த ஒருவா் தொடா்பு கொண்டு ரூ. 10,95,000 முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழி செய்வதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அமானுல்லா அந்தச் செயலி வழியே பணத்தை முதலீடு செய்த நிலையில், பணத்தை திருப்பித் தராமல் அந்த நபா் ஏமாற்றியுள்ளாா்.

இதையடுத்து அமானுல்லா அளித்த புகாரின் பேரில் மாநகர இணைய வழி குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.